மீண்டும் தலை தூக்கும் கொரோனா... சீனாவில் 20 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு...!

மீண்டும் தலை தூக்கும் கொரோனா... சீனாவில் 20 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு...!



corona-virus-on-the-rise-in-china

கோவிட்-19 இது சீனாவில் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொடிய வகை கொரோனா வைரஸ். இது மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். கொரோனா வைரஸ் காற்று வழியாகவும் பரவுகிறது.

மேலும் இந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து அதிகம் பரவுகிறது. கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதோ அல்லது மூச்சு விடும்போதோ மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளியேறும் சிறிய நுண்துகள்களின் மூலம் அருகில் இருக்கும் நபருக்கு பரவுகிறது. இந்த கொரோனா வைரஸ் ஆனது இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய நோயாக கருதப்படுகிறது.

china

இந்த நிலையில் தான் கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவின் உகான் நகரில் தற்போது மீண்டும் வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு  பாதிப்பு எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பதித்தவரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதனால் மக்கள் மீண்டும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.