இப்படியும் கூட கொரோனா பரவுமா.? விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்!

இப்படியும் கூட கொரோனா பரவுமா.? விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்!



Corona spread

கொரோனா வைரசானது பாதிக்கபட்டவரின் தும்மல்,இருமல் மட்டுமல்லாமல் அவரது மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்று வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

corona

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் வெளியிடும் சுவாசக்காற்றில் மிகச்சிறிய அளவிலான வைரஸ் துகள்கள் வெளிவந்து காற்றில் கலப்பதாகவும் அதனை மற்றவர்கள் சுவாசிக்கும் போது, அவர்களுக்கும் தொற்று ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெறும் அறைகளில் அவர்களிடம் இருந்து 6 அடி தொலைவில் உள்ள இடங்களில் காற்றில் வைரஸின் மரபணுக்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவல்கள் உண்மையா என்பது குறித்து இந்திய சுகாதாரத் துறை சார்பில் கூறப்படவில்லை. இந்த செய்தி தற்போது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.