மிருகங்களையும் விட்டுவைக்காத கொரோனா.. அமெரிக்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு!corona-positive-for-a-tiger

உலகம் முழுவதும் மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவின் மிருககாட்சி சாலையில் உள்ள புலி ஒன்றிற்கும் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள BRONX எனப்படும் மிருககாட்சி சாலையில் உள்ள நாடியா என்ற மல்லயன் வகையை சேர்ந்த பெண் புலி ஒன்றிற்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் மற்ற 3 புலிகளுக்கு வரட்டு இருமல் இருப்பதால் அவைகளுக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

Coronovirus

புலிகளுக்கு கொரோனா பரவியது எப்படி என ஆராய்ந்ததில் புலிகளை கவனித்து வந்த நபருக்கு முதலில் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. அவருக்கு அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே புலிகளுக்கு பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் கால்நடை மருத்துவர் இதுகுறித்து தெரிவிக்கையில், இதைப்போன்ற வைரஸ்கள் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் ஒரு மாதிரியாக வேலை செய்யும். எனவே புலிகள் விரைவில் குணமடைந்து விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.