Covid Alert: மக்களே உஷார்:அடுத்த 40 நாட்கள் கவனமாக இல்லாத பட்சத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு..!

Covid Alert: மக்களே உஷார்:அடுத்த 40 நாட்கள் கவனமாக இல்லாத பட்சத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு..!



Corona next wave starting

 

உலகளவில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், 2020 மார்ச் மாதத்தில் இந்தியாவில் உச்சகட்டத்தை சந்தித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்கள் ஊரடங்கு தொடர்பான விஷயத்தில் இருந்து விடுதலை அடைந்தனர். 

சீனாவில் கடந்த மாதம் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து காரணத்தால், அங்குள்ள பல மாகாணங்களில் ஊரடங்கு அமலானது. மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த மாதம் வரையிலும் கொரோனா பரவல் குறைவாக இருந்தன. 

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தோருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் சீனா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு விமான நிலையங்களில் கொரோன பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Corona virus

இந்நிலையில், சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் சீனாவில் உச்சம் பெற்று பல நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. கிழக்கு ஆசியாவில் 2022ல் மீண்டும் தொடங்கியுள்ள கொரோனாவின் உச்சகட்ட பாதிப்பு இன்னும் 10 நாட்களில் ஐரோப்பாவில் உச்சம் பெரும். 

அதனைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பசுபிக் பகுதிகளில் உச்சம்பெற்று, இறுதியாக அது 30 நாட்களுக்குள் இந்தியாவில் தனது பரவுதலின் உச்சகட்ட நிலையை அடையும் என வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஆகையால், எதிர்வரும் 40 நாட்கள் மக்கள் கொரோனா வழிகாட்டுதலை கடைபிடித்து கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். ஒருவேளை மீண்டும் கொரோனா பரவல் பழைய நிலை போல வேகமெடுத்தால் பகுதி ஊரடங்கு, முழுநேர ஊரடங்கு போன்றவையும் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.