
corona ends within 2 years
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரசுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை 2 ஆண்டுகளில் முடிவு கட்ட முடியும் என்று உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 1918-ம் ஆண்டில் உலகையே உலுக்கியது ஸ்பானிஷ் ப்ளூ வைரஸ் காய்ச்சல். இந்த வைரஸால் உலகம் முழுவதும் 50 கோடி பேர்பாதிக்கப்பட்டனர். அதாவது, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதி பாதிக்கப்பட்டனர். அதே போலத்தான் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 2.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 8 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பானிஷ் ப்ளூ பரவியபோது குறைந்த அளவு தொழில்நுட்பம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் மட்டுமே இருந்தன. ஆனால், கொரோனா வைரஸை நாம் அப்படி விடவில்லை. நவீன தொழில்நுட்பம், மருத்துவக் கண்டுபிடிப்புகளால், 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே கொரோனா வைரஸை நாம் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement