அதிர்ச்சி! உயிருள்ள ஆக்டொபஸ் மீனை விழுங்க முயற்சித்த பெண்! நடந்த விபரீதம்! - TamilSpark
TamilSpark Logo
உலகம் லைப் ஸ்டைல்

அதிர்ச்சி! உயிருள்ள ஆக்டொபஸ் மீனை விழுங்க முயற்சித்த பெண்! நடந்த விபரீதம்!

நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் மனிதர்கள் உண்ணும் உணவில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டது. குறிப்பாக சீனர்களை பொறுத்தவரை விதவிதமான கடல்வாழ் உயிரினங்களை பச்சையாகக் கூட பயப்படாமல் சாப்பிடுகிறார்கள். பாம்பு, கரப்பான் பூச்சி, பூனை போன்ற மாமிசங்களையும் பயப்பிடாமல் சாப்பிடுகிறார்கள் சீனர்கள்.

அந்த வகையில் உயிருள்ள ஆக்டொபஸ் ஒன்றை சாப்பிட முயன்று  பெண் ஒருவர் அதனிடம் சிக்கி அவஸ்தைப் படும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் உயிருள்ள ஆக்டொபஸ்ஸை கையில் பிடித்து வாயில் போட்டு விழுங்க முயற்சிக்கிறார். அதற்குள் அந்த ஆக்டொபஸ் அந்த பெண்னின் உதடு மட்டும் கண்ணத்தை கவ்வி இழுக்கிறது. இதனால் வலியால் துடித்த அந்த பெண் ஆக்டொபஸின் கால்களை ஓவென்றாக பிடுங்கி அதன் பிடியில் இருந்து தப்பிக்கின்றார்.

இந்த நிகழ்வு அனைத்தும் லைவ் கேமிரா மூலம் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo