ஹோட்டலில் 2 ஆண்டுகளாக அறையை விட்டு வெளியே வராத நபர்! என்ன காரணம் தெரியுமா? ரூமை திறந்து உள்ளே சென்று பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த இந்த சம்பவம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் பழக்கத்தின் ஆபத்துகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நபர் அறையை காலி செய்தபோது, அங்கு காத்திருந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகள் அறையை விட்டு வெளியே வராத நபர்
சம்பந்தப்பட்ட அந்த நபர், eSports எனப்படும் ஆன்லைன் விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவே இல்லை என்றும், பெரும்பாலான நேரத்தை விளையாட்டுகளிலேயே செலவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
90 செ.மீ உயரத்திற்கு குப்பைகள்
அறையை காலி செய்த பிறகு சுத்தம் செய்யச் சென்ற ஹோட்டல் ஊழியர்கள், சுமார் 90 சென்டிமீட்டர் உயரத்திற்கு குப்பைகள் மலைபோல் குவிந்திருந்ததை கண்டு உறைந்து போயுள்ளனர். பயன்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவறை காகிதங்கள் அறையின் ஒவ்வொரு மூலையிலும் பரவி கிடந்தன.
இதையும் படிங்க: அடச்சீ..கருமம்! நபர் ஒருவர் மற்றொருவரின் முகத்தின் மீது சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி காட்சி! 15 வினாடி வீடியோ வெளியிட்ட வங்கி ஊழியர் கைது..!!!
குப்பைகளுக்குள் புதைந்த விலை உயர்ந்த பொருட்கள்
அறைக்குள் இருந்த கேமிங் கணினி மற்றும் நாற்காலிகள் கூட குப்பைகளுக்குள் புதைந்து போயிருந்தது குறிப்பிடத்தக்கது. பாத்ரூமில் டாய்லெட்டை விட உயரமாகக் குவிந்திருந்த கழிவறை காகிதங்களைப் பார்த்த ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
நிலுவைத் தொகையும் சரியாக செலுத்தப்படவில்லை
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான அந்த நபர், ஹோட்டலுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையையும் முழுமையாக செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் வீடியோவாக பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம், தொழில்நுட்பமும் விளையாட்டும் அளவுக்கு மீறி வாழ்க்கையை கட்டுப்படுத்தும்போது ஏற்படும் விளைவுகளை நினைவூட்டும் எச்சரிக்கையாக பலரால் பார்க்கப்படுகிறது.