உலகம் Covid-19

அடுத்த ஆட்டத்தை தொடங்கியது சீனா..! 2 தடுப்பூசிகளை மனிதர்கள் மீது சோதனை செய்ய சீனா அனுமதி..!

Summary:

China approved to test corono vaccines on human body

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதும், அதற்கான மருந்தை கண்டுபிடிக்கவும் அணைத்து நாடுகளும் தீவிரமாக போராடிவருகிறது.

இந்நிலையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகளை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய சீனா அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளது. ஏற்கனவே சீனாவின் ராணுவ நிறுவனமான CanSino Biologics நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் தடுப்பூசியை உருவாக்கியது. இந்த ஊசியினை பரிசோதனை செய்து மக்களுக்கு பயன்படுத்துவது குறித்து சோதனை செய்ய சீனா ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.

தற்போது, Sinovac Biotech மற்றும் Wuhan Institute of Biological ஆகிய ஆய்வகங்கள் மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வில் வெற்றிபெற்றுள்ளநிலையில், அடுத்ததாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க சீனா தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்பூசிகள் சோதனை வெற்றியடையும் பட்சத்தில் உலகம் முழுவதும் இந்த தடுப்பூசி இன்னும் 6 மாதங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.


Advertisement