கொஞ்சம் கூட பயம் இல்லாமல் கூலாக இருக்கான்.... சிலிண்டருக்குள் எக்குத்தப்பாக மாட்டிக்கிட்ட குழந்தை! வினோத மீட்புப் போராட்ட வீடியோ..!!!



child-stuck-inside-empty-gas-cylinder-viral-video

காலி கேஸ் சிலிண்டருக்குள் புகுந்து மாட்டிக்கொண்ட சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குழந்தையை வெளியே எடுக்க அங்கிருந்தவர்கள் பலமுறை முயன்றும் முடியாததால், இறுதியில் மீட்புக்குழுவினர் உதவிக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் அந்த நேரத்திலும் சிறுவன் எந்தப் பதற்றமும் இல்லாமல் அமைதியாக இருந்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சிலிண்டருக்குள் எப்படி சென்றது?

வைரலாகும் காட்சிகளின்படி, ஒரு சிறுவன் எதிர்பாராத விதமாக காலியாக இருந்த கேஸ் சிலிண்டர் ஒன்றுக்குள் புகுந்துள்ளது. அதன் பின்னர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை எப்படி அதற்குள் சென்றது என்ற கேள்வியும் அங்கு இருந்தவர்களிடையே எழுந்தது.

முயன்றும் முடியாத மீட்பு

முதலில் அங்கிருந்தவர்கள் சிறுவனை மெதுவாக வெளியே இழுத்து எடுக்க முயன்றனர். ஆனால் அது சாத்தியமாகவில்லை. இதனால் நிலைமை சிக்கலாகியதையடுத்து, சிறப்பு மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பாதுகாப்பாக குழந்தையை வெளியே எடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இதுதான் உடனடி கர்மா..! மாணவனுக்கு போட்ட திட்டம்... அந்த மாணவிக்கே நடந்துடுச்சு....வைரலாகும் வீடியோ!!!

நெட்டிசன்களை கவர்ந்த குழந்தையின் ரியாக்ஷன்

பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் குழந்தைகள் பயந்து அழுவது வழக்கம். ஆனால் இந்தச் சிறுவன் முகத்தில் எந்த பயமும் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது வீடியோவின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. இதனால் வைரல் வீடியோவை பார்த்த பலர் நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். “எதிர்கால விஞ்ஞானி போல இருக்கிறான்”, “ஏதோ பெரிய மிஷனில் இருப்பது போல கூலாக இருக்கிறானே” என பல்வேறு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

 

இதையும் படிங்க: அய்யோ...பார்க்கும்போதே பக்கு பக்குன்னு இருக்குதே! 5-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த குழந்தை! நொடியில் வந்த கடவுள்....வைரலாகும் வீடியோ!!!