டீ, காபி பதிலாக தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்! இரவில் இது இல்லைனா தூக்கமே வராதாம்... என்ன காரணம்? அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை பின்னணி...!!!



canadian-woman-addicted-to-drinking-petrol

கனடாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தினமும் பெட்ரோல் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘மை ஸ்ட்ரேஞ்ச் அடிக்‌ஷன்’ என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

ஷானன் என்ற அந்த பெண், ஆரம்பத்தில் பெட்ரோலின் வாசனையை மட்டும் விரும்பி முகர்ந்து பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் நாளடைவில் அந்த பழக்கம் தீவிரமடைந்து, நேரடியாக பெட்ரோலை குடிக்கும் நிலைக்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனைக்கு போன 38 வயது நபர்! பரிசோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி! இன்பத்திற்காக இப்படியா? சுமார் 36 மணி நேர அவதி.. மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!!

டீ, காபிக்கு பதிலாக பெட்ரோல்

தகவலின்படி, ஷானன் தினமும் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பதற்குப் பதிலாக பெட்ரோல் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். ஒரு நாளில் பலமுறை இதைச் செய்யும் அவர், இரவு தூங்குவதற்கு முன்பும் பெட்ரோல் அருந்துவதாக கூறியுள்ளார்.

பெட்ரோல் குடிக்கும் போது நாக்கில் நடுக்கம் மற்றும் தொண்டையில் கடுமையான எரிச்சல் ஏற்படுவதாகவும், அதே நேரத்தில் மனஅழுத்தம் குறைந்து அமைதி கிடைப்பது போல உணர்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் தடுக்க முயன்றபோதும், அவர்களுக்குத் தெரியாமல் பெட்ரோலை வாங்கி தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை

இந்த பழக்கம் மிகவும் ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பெட்ரோல் என்பது மனித உடலுக்குள் செல்லக் கூடாத நச்சு இரசாயனம் என்பதால், அது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளைக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது சாதாரண பழக்கம் அல்ல என்றும், ‘பிகா டிஸார்டர்’ எனப்படும் அரிய மனநலக் குறைபாட்டின் ஒரு வடிவமாக இருக்கலாம் என்றும் மனநல நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

‘பிகா டிஸார்டர்’ என்றால் என்ன?

மருத்துவ உலகில் ‘பிகா டிஸார்டர்’ என்பது உடலுக்குத் தேவையில்லாத அல்லது நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற தீவிர விருப்பம் ஏற்படும் மனநலக் குறைபாடாக கருதப்படுகிறது. மண், சுண்ணாம்பு, பெயிண்ட், சாக்லேட் பொருட்கள் அல்லது பெட்ரோல் போன்றவற்றை உட்கொள்ளும் பழக்கம் இந்த குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

இதையும் படிங்க: 7 வருஷமாக பயங்கர தலைவலியால் அவதிப்பட்ட பெண்! ஸ்கேனில் தெரிந்த அந்த ஒரு உருவத்தை பார்த்து அதிர்ந்துப்போன மருத்துவர்கள்! நடுங்க வைக்கும் உண்மை சம்பவம்..!!!