உலகம்

நடுவானில் பரந்த விமானம்! திடீரென தீப்பற்றியது! உயிர் பயத்தில் கதறிய 226 பயணிகளை சாமர்த்தியமாக காப்பாற்றிய விமானிகள்!

Summary:

Burned aircraft in midair


ரஷ்யாவில் யூரல் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏ -321 பயணிகள் விமானம் ஒன்று 226 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் நடுவானில் பறந்துள்ளது. நடுவானில் விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக அவசர அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிறுவனம் தரப்பில் கூறுகையில் விமானத்தின் மீது பறவைகள் மோதியதே விமான இயந்திரத்தில் தீ ஏற்பட்டதற்கான காரணம் என தெரிவித்தனர்.

இந்தநிலையில் விமானத்திற்குள் தீ பரவுவதற்கு முன்பாக பயணிகளை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்த விமானி, மாஸ்கோவில் ஓடுபாதைக்கு அருகே உள்ள கிராமப்புற காட்டில் விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

அவசர அவசரமாக விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழப்பு ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விமானம் காட்டில் தரையிறங்கிய போது பயணிகள் பயத்தில் கதறிய காட்சி வெளியாகியுள்ளது.


Advertisement