இனி இந்த நாட்டுக்கு இந்தியர்கள் எளிதாக சென்று வரலாம்.. விசா கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டம்..!Briton Govt Plan to Get More Tourist Education Work Visa to Indian Peoples

பிரிட்டன் நாட்டு அரசு இந்திய அரசுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், இதன் மூலமாக இந்திய சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை பிரிட்டன் நாட்டில் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள, பிரிட்டன் நாட்டின் வர்த்தக செயலாளர் ஆனி மேரி டெல்லிக்கு இம்மாதம் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியர்களின் குடியேற்ற விதிகளை தளர்த்த பிரிட்டன் அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது. 

India

இதனால் இந்திய சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர்கள் பிரிட்டன் வந்து செல்ல ஏதுவாக குறைந்த கட்டணத்தில், எளிய முறைகளில் விசா வழங்க ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.