உலகம்

பள்ளி வாகனத்தில் திடீரென மாதவிடாய் ஆன இளம்பெண், அருகில் இருந்த சகமாணவன் செய்த செயல், வைரலாகும் தாயின் பதிவு.!

Summary:

boy help to girl in periods time

தனது பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது இளைஞன் ஒருவன் செய்த செயலை தாய் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அச்சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில் எனது  மகள் அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு பள்ளி பேருந்தில்திரும்பிக் கொண்டிருந்த போது மாதவிடாய் ஏற்பட்டுள்ளது

இதை என் மகளை காட்டிலும் வயது மூத்த மாணவன் ஒருவன், அவள் ஆடையில் ஏற்பட்டிருந்த இரத்த கறையை கண்டு மாதவிடாய் ஏற்பட்டதை அறிந்திருக்கிறான்.

பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அந்த மாணவன், மெதுவாக என் மகள் காதருகே வந்து. உன் ஆடையில் பின்னே இரத்த கறை ஏற்பட்டிருக்கிறது. நான் என் ஸ்வெட்டரை தருகிறேன். பேருந்தில் இருந்து இறங்கும் போது அதை உன் இடுப்பில் கட்டிக் கொண்டு வீட்டுக்கு பத்திரமாக செல் என்று கூறி இருக்கிறான்.


முதலில் என் மகள் தர்மசங்கடமாக தான் உணர்ந்திருக்கிறார். ஆனால், அதை மனதுக்குள் வைத்துக் கொண்டு பரவாயில்லை என்று அந்த மாணவனிடம் என் மகள் கூற, அவனோ பதிலுக்கு.., எனக்கு தங்கைகள் இருக்கிறார்கள். இதெல்லாம் பரவாயில்லை.. நீ என் ஸ்வெட்டரை எடுத்து செல் என்று மேலும் கூறி என் மகளை பத்திரமாக பேருந்தில் இருந்து இறக்கிவிட்டிருக்கிறான்.

ஒருவேளை நீங்கள் அந்த மாணவனின் அம்மாவாக இருந்தால். உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் மகனால் நல்லப்படியாக வளர்த்துள்ளீர்கள். இந்த தலைமுறை இளைஞர்கள் மிகவும் மோசமானவர்கள். கெட்ட வழியில் பயணிக்கிறார்கள் என்ற செய்திகளே அதிகம் காதுகளுக்கு வருகின்றன.

ஆனால், அவர்கள் நல்ல காரியங்களும் செய்கிறார்கள் என்பதை இந்த ஊரறிய வேண்டும் என்பதற்கே இந்த பதிவிடுகிறேன் என்று, அந்த தாய் தன் பதிவினை முடித்துக் கொண்டிருக்கிறார்.

பெண்களை காம பொருளாக மட்டும் பார்க்கும் இந்த காலத்தில் இப்படியும் இளைஞர்கள் இருக்கிறார்கள் என இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement