தந்தையின் உயிரை காப்பாற்ற ஒரு நாளைக்கு ஐந்து முறை உணவு சாப்பிடும் சிறுவன்..! காரணம் தெரிந்தால் உங்கள் கண்களில் கண்ணீர் வரும்..!

தந்தையின் உயிரை காப்பாற்ற ஒரு நாளைக்கு ஐந்து முறை உணவு சாப்பிடும் சிறுவன்..! காரணம் தெரிந்தால் உங்கள் கண்களில் கண்ணீர் வரும்..!



boy-gains-weight-to-save-his-fathers-life

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனாவில் நடந்த சம்பவம் இது. தனது தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுவன் ஒருவன் தினமும் 5 முறை சாப்பிடும் சம்பவம் கேட்போரை சற்று அதிர்ச்சியடையவைத்தாலும், படித்துமுடித்ததும் சற்று கண்கலங்க வைக்கும்.

ஆம், சீனாவை சேர்ந்த லோஜி என்ற இந்த சிறுவனின் தந்தை கடந்த 7 ஆண்டுகளாக இரத்த புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை வழங்குவதற்காக குறிப்பிட்ட நபரின் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவரின் எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்ட நபருடன் பொருந்துகிறதா என மருத்துவர்கள் சோதனை செய்துள்ளன்னர்.

Mysterious

யாருடைய மாதிரியும் பொருந்தாத நிலையில் அவருடைய 15 வயது மகன் லோஜியின் எலும்பு மஜ்ஜை மட்டும் பொருந்தியுள்ளது. ஆனால் லோஜி 30 கிலோ மட்டுமே எடை இருப்பதால் மருத்துவர்கள் அந்த சிறுவனுடைய எலும்பு மஜையை  எடுக்க மறுத்து விட்டனர். எலும்பு மஜையை எடுக்கவேண்டும் என்றால் குறைந்தபட்சம் 45 கிலோ எடை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் தனது தந்தையை காப்பாற்ற அந்த சிறுவன் தனது உடல் எடையை அதிகரிக்க ஆரம்பித்தான். இதற்காக ஒருநாளுக்கு குறைந்தபட்சம் 5 தடவைக்குமேல் அந்த சிறுவன் சாப்பாடு சாப்பிட்டுள்ளான்.