உலகம்

பள்ளிவாசலில் தொழுகையின் போது குண்டு வெடிப்பு தாக்குதல்! 62 பேர் பலி! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

bomb blast in afganisthan


ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 62 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்கார் மாகாணத்தின் ஹஸ்கா மெய்னா மாவட்டத்தின் ஜாதாரா நகரில் உள்ள மசூதிக்கு வெள்ளிக்கிழமையான நேற்று வழக்கம் போல் மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர். 

அப்போது, திடீரென பள்ளிவாசலின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் வெடித்து‌ச் சிதறியது. இதில், 62 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில், கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 4,313 பொதுமக்கள் என்று ஐநா சபை அறிக்கை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement