ட்ரம்ப் என்றால் மரணத்திற்கு சமம்..! அமெரிக்காவில் திடீரென வெடித்த ஆர்ப்பாட்டம்.! ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த எதிர்ப்பு.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா பாதிப்பால் உலகின் வளர்ந்த நாடான அமெரிக்க கடுமையான இழப்புகளை சந்தித்துவருகிறது.
அமெரிக்காவில் இதுவரை 7 லட்சம் பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் சிறிது சிறிதாக இன்னும் சில நாட்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாக்குக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஊரடங்கை தளர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சடலங்கள் போன்ற உருவபொம்மைகளை எடுத்துவந்தும், ட்ரம்ப் = மரணம் என்ற பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
"Body bags" sent to Trump's building to protest #COVID19 response pic.twitter.com/ru5MK7OdD3
— CGTN (@CGTNOfficial) April 19, 2020