#வீடியோ: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பயங்கரம்!! பதறவைக்கும் வீடியோ இதோ..

#வீடியோ: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பயங்கரம்!! பதறவைக்கும் வீடியோ இதோ..


birthday-celebration-video-in-mom

மகனுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தாய் தீவிபத்தில் சிக்கிய  பதறவைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த அனா ஒஸ்டெர்ஹவுஸ் என்ற 34 வயதுடைய  பெண், தனது 7 வயது மகன் ஹண்டர்  மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அங்கு கூடியிருந்த அனைத்து உறவினர்கள் முன்னிலையிலும் பிறந்தநாள் கேக்கில்  அனா நிறைய மெழுகுவர்த்தியை ஏற்றினார். பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாட  தொடங்கியதும் உற்சாகத்தில் அனாவும் பாடலை பாடிக்கொண்டே கேக்கில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை அணைக்க முற்பட்டார்.

அத்தருணத்தில் எதிர்பாராத விதமாக எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி  தலைமுடியில் பட்டு திடீரென தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. பின்பு அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து அனாவை விபத்திலிருந்து காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி...