பசியால் முதியவரின் சடலத்தை கூறுபோட்டு ஏப்பம்விட்ட நாய்கள்: வளர்த்தவருக்கே இந்த நிலைமையா?.!

பசியால் முதியவரின் சடலத்தை கூறுபோட்டு ஏப்பம்விட்ட நாய்கள்: வளர்த்தவருக்கே இந்த நிலைமையா?.!



argentina-dog-ate-owner-corpses

 

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த 74 வயது முதியவர் கார்லோஸ் டோனினி, தனது வீட்டில் 17-க்கும் மேற்பட்ட நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார். இவர் தனியாக வசித்து வந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 

இது தொடர்பான தகவல் யாருக்கும் தெரியாததை தொடர்ந்து, 17 நாய்களும் பசியால் தவித்து, இறுதியில் முதியவரின் உடலை கடித்துக் குதறி தங்களது பசியை ஆற்றியிருக்கின்றன.

அக்கம்பக்கத்தினர் முதியோரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது விபரீதம் தெரியவந்துள்ளது. 

மேலும் முதியவரின் ஆடைகள், நாய்களால் கடிக்க முடியாத எலும்புகள் போன்றவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.