6 பேரை பிணைக்கைதிகளாக கடத்திய பழங்குடியின மக்கள்! கோரிக்கையை கேட்டு அதிர்ச்சியில் மூழ்கிய அதிகாரிகள்!

6 பேரை பிணைக்கைதிகளாக கடத்திய பழங்குடியின மக்கள்! கோரிக்கையை கேட்டு அதிர்ச்சியில் மூழ்கிய அதிகாரிகள்!



amazon-tribe-releases-kidnapped-people-after-body-of-le

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார். இது பெரு மற்றும் பிரேசில் நாடுகளுக்கு அருகே அமைந்துள்ளது. மேலும் அந்த நாட்டை சுற்றிலும்,  உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் அமைந்துள்ளது. இந்த அமேசான் காடுகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா அமேசான் பகுதிகளிலும் பெருமளவில் பரவி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இத்தகைய கொரோனா வைரஸால் பழங்குடியின மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈகுவடார் நாட்டின் குமே என்ற பகுதியில் பழங்குடியின மக்களின் தலைவராக இருந்தவர் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார்.

Aboriginal people

இதனை தொடர்ந்து அவரது உடல் கொரோனோவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் முறைப்படி அரசாங்கத்தால் அடக்கம் செய்யப்பட்டது.  இந்நிலையில் உயிரிழந்த தங்களது தலைவரின் உடலை தோண்டி எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் ஈகுவடார் நாட்டை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள்,  2 போலீசார் மற்றும் பொதுமக்கள் இருவர் என ஆறு பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து வேறுவழியின்றி, புதைக்கப்பட்ட பழங்குடியினர் தலைவரின் உடல் மீண்டும் தோண்டப்பட்டு அப்பகுதி மக்களிடமே வழங்கப்பட்டது. மேலும்  தங்கள் தலைவரின் உடலை பெற்றுக் கொண்ட பின்பு அமேசான் பழங்குடி இனமக்கள் தாங்கள் பிடித்து வைத்திருந்த ஆறு பேரையும் விடுதலை செய்தனர்.