33 வருடம் 7 மாத கருவை சுமந்து கல்லை பெற்றெடுத்த 73 வயது மூதாட்டி.. ஷாக்கில் மருத்துவர்கள்.!

33 வருடம் 7 மாத கருவை சுமந்து கல்லை பெற்றெடுத்த 73 வயது மூதாட்டி.. ஷாக்கில் மருத்துவர்கள்.!


Algeria 73 Aged Lady Baby Stone Last 33 Years Pregnancy 7 Month Baby Without her Knowledge

35 வயதில் கருவுற்ற பெண்மணிக்கு பிரசவம் நடக்காத நிலையில், அவரின் 73 வயதில் கருவில் இறந்து இருந்த குழந்தை அகற்றப்பட்டது. 

அல்ஜீரிய நாட்டினை சார்ந்த 73 வயது மூதாட்டிக்கு திடீரென வயிற்று வலி ஏற்படவே, வலி தாங்க இயலாத மூதாட்டி அலறித்துடித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் மூதாட்டியின் வயிற்றை ஸ்கேன் செய்கையில், மூதாட்டி பல வருடமாக 7 மாத கருவுடன் இருப்பது தெரியவந்துள்ளது. 

Algeria

இந்த விஷயம் மூதாட்டிக்கு தெரியாத நிலையில், வயிற்றில் இருந்த கரு கல்லாக மாறி இருக்கிறது. இதனால் அவருக்கு எதுவும் தெரியாத நிலையில், இதனை மருத்துவ ரீதியில் அறிய நிகழ்வான பேபி ஸ்டோன் என்று அழைக்கின்றனர். மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பின்னர், 2 கிலோ அளவு கொண்ட கருவை அகற்றியுள்ளனர்.

குழந்தையின் வளர்ச்சிக்காலங்களில் கருவில் உள்ள குழந்தைக்கு ஏற்படும் தொடர் இரத்த இழப்பு காரணமாக கரு கல்லாக மாறி இருக்கலாம் என்றும், இது லித்தோபிடியன் என்று அழைக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.