உலகம் லைப் ஸ்டைல் Covid-19

ஊரடங்கு உத்தரவால் 95 சதவீதம் அதிகரித்த ஆபாச இணையதளத்தின் பார்வையாளர்கள்.! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.!

Summary:

Adult website views increased 95 percentage due to corono lock down

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இவரை 1,324,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 73,645 பேர் உயிர் இழந்துள்னனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக போராடிவருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் அனைவரும் வீடுகளிலையே இருப்பதால் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு, இணையதள பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது. அதிலும், பிரபல ஆபாச இணையதளம் ஒன்றின் பார்வையாளர்கள் வரவு இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் 95% அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த பிரபல ஆபாச வலைத்தளத்தை இந்தியாவில் இருந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் குறிப்பிட்ட ஆபாச வலைதளத்தின் பார்வை பலமடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement