133 நாட்கள் படம் பிடிக்கப்பட்ட சூரியனின் அரிய புகைப்படம்... வெளியிட்ட நாசா..!

133 நாட்கள் படம் பிடிக்கப்பட்ட சூரியனின் அரிய புகைப்படம்... வெளியிட்ட நாசா..!



a-rare-photo-of-the-sun-captured-for-133-days-nasa-rele

சூரியனானது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களால் ஆன ஒரு கோள வடிவு உருண்டையாகும். இந்த சூரியன்தான் நம் பூமிக்கும் மற்ற கோள்களுக்கும் நட்சத்திரமாகும். மேலும் சூரியன் எந்த அளவுக்கு பெரியது என்றால் கிட்டத்தட்ட நம் பூமியைப் போன்று 1,30,000 பூமிகளை சூரியனுக்குள் வைக்கும் அளவுக்கு பெரியது.

இந்நிலையில் சூரியனின் இயக்கம் குறித்த ஆய்வகமானது கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சூரியனை படம் பிடித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் டிசம்பர் 22 வரை தொடர்ந்து 133 நாட்கள் அந்த ஆய்வகமானது சூரியனை படம் பிடித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் சூரியன் மட்டுமின்றி பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரங்களின் செயல்பாடுகள் பற்றியும் தெளிவான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று நாசா கூறியுள்ளது. மேலும் 27 நாட்களுக்கு ஒரு முறை சுழலும் சூரியனின் சுழற்சியானது டைம்லாப்ஸ் முறையில் வெளியிடப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.