8 வது மாடியில் 80 அடி உயரத்திற்கு மேல் குழந்தையை பால்கனியில் வைத்து ஊஞ்சலில் ஆட்டிய தந்தை..! பார்ப்போரை பதறவைக்கும் வீடியோ.! - TamilSpark
TamilSpark Logo
உலகம் லைப் ஸ்டைல்

8 வது மாடியில் 80 அடி உயரத்திற்கு மேல் குழந்தையை பால்கனியில் வைத்து ஊஞ்சலில் ஆட்டிய தந்தை..! பார்ப்போரை பதறவைக்கும் வீடியோ.!

அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் 8 வது தளத்தில் குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் ஊஞ்சல் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை நடுங்க வைக்கிறது.

Jonathan C. Padilla என்ற டிவிட்டர் பயனர் வெளியிட்டுள்ள அந்த டிவிட்டர் பதிவில் இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது நபர் ஒருவர் தனது மகளை தனது குடியிருப்பின் பால்கனியில் ஆபத்தான முறையில் ஊஞ்சலில் ஆட்டுகிறார் என பதிவிட்டுள்ளார் அந்த நபர்.

சுமார் 12 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் மிக உயரமான கிட்டத்தட்ட 80 அடி நீளத்திற்கு இருக்கும் 8 வது மாடியின் பால்கனியில் குழந்தையின் தந்தை ஆபத்தை உணராமல் குழந்தையை தொட்டிலில் உட்காரவைத்து குழந்தையை வெளியே  நோக்கி தள்ளி ஊஞ்சலில் ஆட்டுகிறார்.

ஒருவேளை குழந்தையின் காய் தவறி குழந்தை ஊஞ்சலில் இருந்து விழுந்திருந்தால் ஏன்னா ஆகும் என்ற பதற்றத்துடன் வீடியோவை பார்க்கும்போது நமக்கே புல்லரிக்கிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo