3 நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து விடுதலை பெற்ற 96 வயது பாட்டி!

3 நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து விடுதலை பெற்ற 96 வயது பாட்டி!



96 old lady recovered from corono virus

சீனாவில் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸால் இதுவரை 1300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது. 

கடந்த வாரம் இந்த கொடிய வைரஸால் தாக்கப்பட்ட 92 வயது முதியவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். தற்போது அவரையும் விட 4 வயது அதிகமான 96 வயது பாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு குணமடைந்துள்ளார். 

Corono virus

சீனாவின் நின்க்போ பகுதகயை சேர்ந்தவர் அந்த 96 வயதான பாட்டி லூ. இவரின் 2 மகள்கள் ஏற்கனவே கொரோனாவால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மூலம் 96 வயது பாட்டிக்கும் கடந்த வாரம் கொரோனா தாக்கியது. 

இவர் கொரோனா அறிகுறிகளுடன் ஹாங்சூவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் வைத்து கடந்த 3 நாட்களாக இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா இல்லை என்பதால் இவர் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். 

Corono virus

சீனாவில் கொரோனா தாக்கப்பட்டு குணமடைந்த மிகவும் முதியவர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்த 96 வயது பாட்டி லூ. இதுகுறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.