உலகம்

நடுஇரவில் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றிய 6வயது சிறுமி! குவியும் பாராட்டுக்கள்!

Summary:

6 year child save whole family at midnight

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வருபவர் ஜிம்மி கார்ல்பன். அவரது மனைவி மடலின். அவர்களுக்கு ஆறு வயதில் மகள் மற்றும் 2 வயது மகன் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அதிகாலை 2 மணியளவில் வீட்டில் உள்ளே  அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அவர்களது வீட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

அப்பொழுது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த புகை கண்டுபிடிப்பான் கருவி சத்தம் எழுப்பியுள்ளது. ஆனால் அனைவரும் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அதனை கவனிக்கவில்லை. இருப்பினும் அந்த சமயத்தில் எழுந்த அவரது 6 வயது மகள் உஷாராகி ஓடிச்சென்று அவசரஅவசரமாக தந்தையை எழுப்பியுள்ளார். 

அதற்குள் வீட்டின் பல இடங்களில் தீ வேகமாக பரவியது. பின்னர் வேகமாக எழுந்த அவரது தந்தை அவசரஅவசரமாக மாடிக்கு சென்று  தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மகனை எழுப்பி காப்பாற்றி வெளியே அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் பாதி பகுதி முற்றிலும் சேதமடைந்தது. வீட்டின் உள்ளே இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமானது. 

இந்நிலையில் 6 வயது சிறுமி தனது குடும்பத்தை காப்பாற்ற மிகவும் விரைந்து செயல்பட்டதற்கு,  அவருக்கு போலீசார்கள் சார்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Advertisement