அடுத்தடுத்து மோதிய 46 கார்கள் 4 பேர் பலி!.. வெடிகுண்டு பனிப்புயலால் பாதிப்பு...!!

அடுத்தடுத்து மோதிய 46 கார்கள் 4 பேர் பலி!.. வெடிகுண்டு பனிப்புயலால் பாதிப்பு...!!


46 cars collided in America, 4 people were killed due to bomb blizzard

அமெரிக்காவை வெடிகுண்டு சூறாவளி( bomb cyclone) என்ற மிக பயங்கரமான பனி புயல் தாக்கி வருகிறது.

அமெரிக்காவின் ஓஹியோவில் சாலையை பனி மூடியதால் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான கார் விபத்தில் இதுவரை நான்கு பேர் வரை
உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அமெரிக்காவின் எரி கவுண்டியில் இருக்கும் ஓஹியோ சாலையை பனி மூடியுள்ளது. இதனால் சுமார் 46 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் மட்டுமே உயிரிழந்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளதாக ஓஹியோ மாநில நெடுஞ்சாலை ரோந்து படை கூறியுள்ளது.

விபத்து நடந்த சில மணி நேரத்திற்கு பின்னர் இருபுறங்களிலும் சாலைகள் மூடப்பட்டன. தற்போது அவவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒயிட் அவுட் நிலைமை இன்னும் நீடிக்கிறது, எனவே பயணங்களை தவிர்க்குமாறு, ஓஹியோ மாநில நெடுஞ்சாலை ரோந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

மேலும், ஆயிரக்கணக்கான விமான பயணங்கள் இந்த பனி புயல் தாக்கத்தினால் ரத்து செய்து இருப்பதாக கூறப்படுகிறது. வணிக வளாகங்கள் மற்றும் சுமார் 5,50,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பனிப்புயல் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.