அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயலில் 32 பேர் பலியானதாக தகவல்..!! பல நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு..!!



32 people died in the powerful storm in America..!! Power cuts in many cities..!!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த புயலில் சிக்கி 32 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்தது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ் ஆகிய மாகாணங்களை அடுத்தடுத்து பயங்கர புயல்கள் தாக்கின. 

அங்கு சுமார் 60 புயல்கள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல்கள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் இந்த புயல்கள் தாக்கின. சாலை ஓரங்களில் இருந்த மரங்கள், மணிக்கு பல மைல் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றில் சிக்கி முறிந்து விழுந்தன. மேலும் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன.

பல இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்தது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எட்டு மாகாணங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த 8 மாகாணங்களில் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 5 லட்சம் பேர் இருளில் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 

டென்னிசி மாகாணம், வின், அர்கனாஸ், சுல்லிவன், இண்டியானா நகரங்கள் மற்றும் இல்லினாய்ஸ், அலபாமா, மிச்சிபி மற்றும் லிட்டில் ராக் பகுதிகளில் பொதுமக்கள் பலியாகினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், கடும் புயலால் 11 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், இல்லினாய்ஸ், ஆர்கன்சாஸ் ஆகிய மாகாணங்களில் மேலும் மீட்புக் குழுவினர் பல உடல்களை மீட்டதை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்னும் பல புயல்கள் அங்கு தாக்கக்கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.