படியில் அமர்ந்தால் 30,000 அபராதமா? அரசு விடுத்த அதிரடி அறிவிப்பு!! எங்கு தெரியுமா?

Summary:

30 thousand fine for sit on spanish dteps in rome

இத்தாலி தலைநகர் ரோமில் புகழ்பெற்ற மிக முக்கிய வரலாற்று சின்னமாக திகழ்வது ஸ்பானிஷ் படிகள். ரோமானிய கட்டிடக்கலையின் சிறப்பை உணர்த்தக்கூடியது.. இந்த படிகள் 1776 ஆம் ஆண்டு ப்ரான்செஸ்கோ டி சாங்டிஸ் என்ற கட்டிடக் கலை வல்லுநரால் வடிவமைக்கப்பட்டது.

174 படிகளைக் கொண்ட இதன் உச்சிப்பகுதியில் ட்ரினிடா டி மான்டி என்ற தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

spanish steps க்கான பட முடிவு

இந்நிலையில் அவர்கள் படிகளில் உட்கார்ந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது ஆகியவற்றால் வரலாற்றுச்சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று புகார்கள் எழுந்த நிலையில், அவற்றிற்கு தடைவிதித்து அரசு அறிவிப்பை வெளியிட்டு வந்தது.

அதன்படி ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலாப்பயணிகள் அமர தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி யாரேனும் படிகளில் அமர்ந்தாலோ அல்லது புகைப்படம் எடுக்க முயற்சி செய்தாலோ அவர்களுக்கு 400 யூரோ அதாவது  இந்திய மதிப்பின் படி சுமார் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


Advertisement