உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பிறந்த குழந்தையின் அபார நோய் எதிர்ப்பு சக்தி..! கொரோனாவுக்கு சிகிச்சையே இல்லாமல் மீண்டுவந்த அதிசயம்.!

Summary:

17 days old baby girl recovers from coronavirus without medicines

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19 என்ற வைரஸ் தாக்குதலில் இதுவரை 2600 கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேலானோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவை தாண்டி மற்ற நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கடந்த 5-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தாய் மூலம் குழந்தைக்கும் வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என நடத்தப்பட்ட சோதனையில் குழந்தைக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனால், குழந்தை என்பதால் தீவிர வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் கொடுக்க முடியாது. இதனால் குழந்தையை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதே நேரம் அந்த குழந்தைக்கு சியோசியோ என பெற்றோர் பெயரிட்டனர்.

இந்நிலையில், 17 நாட்களாக தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அந்த குழந்தைக்கு  எந்த வித மருத்துவ உதவிகளும் இல்லாமல், இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மூலம் வைரஸ் பாதிப்பு முற்றிலும் குணமாகியுள்ளது. பெரியவர்களே மிகவும் சிரமப்படும்போது பிறந்த குழந்தை நோயை எதிர்த்து போராடி மீண்டு வந்தது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement