பரபரப்பு..! வீட்டுப்பாடம் செய்யாத 15 வயது சிறுமிக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்..! குவியும் கண்டனங்கள்..!

பரபரப்பு..! வீட்டுப்பாடம் செய்யாத 15 வயது சிறுமிக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்..! குவியும் கண்டனங்கள்..!



15-years-old-jailed-not-not-finishing-shcool-home-works

அமெரிக்காவில் வீட்டு பாடம் முடிக்காத சிறுமியை சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளநிலையில் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்,  ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. அமெரிக்காவிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் அமெரிக்க-ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற 15 வயது மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் முடிக்கவில்லை எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  வழக்கை விசாரித்த நீதிபதி மாணவி செய்தது குற்றம் எனவும், நன்னடத்தை விதிகளை மீறியது என்றும் இது சமூகத்திற்கான அச்சுறுத்தல் எனவும் கூறி சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பலர் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். குறிப்பிட்ட மாணவி கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதாலையே இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், வரும் திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.