கொரோனாவை வென்று கெத்துகாட்டும் 103வயது பாட்டி! மருத்துவமனையில் பீர்குடித்து கொண்டாட்டம்!

கொரோனாவை வென்று கெத்துகாட்டும் 103வயது பாட்டி! மருத்துவமனையில் பீர்குடித்து கொண்டாட்டம்!



103-oldlady-beats-coronovirus

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது.மேலும் இதனால் பல நாடுகளிலும் பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. மேலும் இத்தகைய கொரோனா  வைரசால் பெருமளவில் முதியவர்களே உயிரிழக்கின்றனர் எனவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.: இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி கொரோனா மற்றும் மரணத்தை வென்று மீண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மசாச்சுச்செட்ஸ் பகுதியை சேர்ந்தவர் டென்னி ஸ்டெஜ்னா.103 வயது நிறைந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தார். இந்நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்த அவரது உறவினர்கள் அவருக்கு வயது அதிகமாக உள்ளநிலையில் மிகவும் பயந்துள்ளனர். ஆனால்  டென்னி ஸ்டெஜ்னா மிகுந்த மன தைரியத்துடன் இருந்துள்ளார். மேலும் எப்பொழுதும் துறுதுறுப்பாக இருந்துள்ளார். இதற்கிடையில் அவர் சாப்பிடுவதையும், குடிப்பதையும் நிறுத்திவிட்டார். 

corono

மேலும் மருத்துவர்கள் கடைசியாக டென்னியை காண்பதற்கும் குடும்பத்தினருக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் மருத்துவத்துறை நிர்வாகத்தினர் டென்னி கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முதன் முறையாக அவர் மருத்துவர்களிடம் தனக்கு பீர் வேண்டும் என கேட்டுள்ளார். பின்னர் அவரது மனவலிமை, நம்பிக்கையை  பாராட்டி மருத்துவர்கள் அவருக்கு பீர் வாங்கி கொடுத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.