அய்யோ... யம்மா.. போதும்! நிறுத்தும்மா ! கொஞ்சம் இரக்கம் காட்டும்மா! இளம்பெண்ணின் பாட்டை கேட்டு கதறும் நெட்டிசன்கள்... நீங்களே இந்த வீடியோவை பாருங்க.!



viral-woman-singing-video-instagram

இன்றைய இளம் தலைமுறை சமூக வலைதளங்களில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதில் சில காணொளிகள் விமர்சனங்களையும் சிலவை பாராட்டுகளையும் பெற்றுக்கொள்கின்றன. தற்போது ஒரு பெண் பாடிய வைரல் வீடியோ இணையத்தில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.

சேலையில் பாடிய பெண்

சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படும் இந்த வீடியோவில், ஒரு பெண் சேலையில் அழகாக அமர்ந்து, இசைக்கருவியுடன் பாடத் தொடங்குகிறார். ஆனால் பாடலின் குரல் சீராக இல்லாமல், தாளம் குழப்பமாக இருந்ததால் பார்வையாளர்கள் சிரிப்பில் மூழ்கினர். இருந்தாலும், பலர் அவளின் தைரியத்தை பாராட்டியும் வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் வைரல்

“khushi_singer._11” என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எட்டியுள்ளது. அதேசமயம் எட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. பலர் கலாய்ப்பாகவும், சிலர் ஊக்கமாகவும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: இரண்டு பைக் சேர்ந்து இழுத்தாலும் இந்த பேண்ட் மட்டும் கிழியவே கிழியாது! ஒன்று ரூ. 399 மட்டுமே! கடைக்காரரின் டெமோ வீடியோ வைரல்...

பார்வையாளர்களின் எதிர்வினை

ஒருவர், “அக்கா, கொஞ்சம் இரக்கம் காட்டு” என எழுத, மற்றொருவர், “பாடாமல் இருந்தால் நல்லது” என விமர்சித்துள்ளார். மற்றொருவர் நகைச்சுவையாக, “இந்த அக்கா லதா அக்காவையும் தோற்கடித்துவிட்டாள்” என்று கூற, இன்னொருவர், “உன் குரல் கேட்டு எனக்கு அழுகை வருகிறது” என கருத்து தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விமர்சனங்கள் குவிந்தாலும், அச்சமின்றி தன் குரலை பகிர்ந்த இந்த பெண்ணின் தைரியம் பலருக்கு ஒரு புதிய உந்துதலாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: நம்பவே முடியல... ஆனால் உண்மை தாங்க! ஹெல்மெட் போட்டுட்டு சைக்கிள் ஓட்டும் பச்சைக்கிளி! வைரலாகும் வீடியோ....