அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பைத்தியம் பிடிச்சுருக்கு போல....சேலையில் தீ வைத்து ஆடிய பெண்! அடுத்து நடந்த அதிர்ச்சி காட்சி.....
சமூக ஊடகங்களில் புகழை தேடும் நோக்கில் சிலர் எவ்வளவு ஆபத்தான செயல்களையும் மேற்கொள்ளத் தயங்காமல் இருப்பது சமீபத்திய பல சம்பவங்கள் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. அந்த வரிசையில் ஒரு பெண் செய்த ஆபத்தான ரீல்ஸ் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலையில் தீ வைத்து ரீல்ஸ்
சமூக வலைதளத்தில் லைக்ஸ், வியூஸ் பெறுவது பெரிய சாதனையாக கருதப்படும் போக்கு இளம் தலைமுறையில் அதிகரித்து வரும் நிலையில், ஒரு பெண் தன் சேலையின் ஒரு பகுதியை தானே தீ வைத்து ரீல்ஸ் வீடியோ படமாக்க முயன்றுள்ளார். தீ எரிந்து கொண்டிருந்தபோதும் அவர் டான்ஸ் ஆடி ஸ்டெப்களை போட முயல்ந்த காட்சி அதிர்ச்சியூட்டியது.
12 விநாடிகளில் பரவிய தீ – உயிர் தப்பித்த பெண்
தொடக்கத்தில் இது சாகச முயற்சியாகத் தோன்றினாலும், சில விநாடிகளில் தீ வேகமாகப் பரவியதால் நிலைமை கைமீறியது. பதற்றத்தில் அந்தப் பெண் உடனடியாக சேலையை அவிழ்த்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். இந்த 12 விநாடி வீடியோ ‘X’ தளத்தில் @maheshb20727795 மூலம் பகிரப்பட்டு 1 லட்சத்துக்கும் மேலான பார்வைகளை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ச்சீ... கருமம்! இத எப்படி சாப்பிடுறது! சாப்பிடற உணவை காலால் மிதிச்சி.... அட்டூழியம் செய்யும் அதிர்ச்சி வீடியோ!
நெட்டிசன்கள் கடும் கண்டனம்
இச்சம்பவத்தை கண்ட நெட்டிசன்கள் தீவிரமாக விமர்சித்து வருகின்றனர். “இது என்ன பைத்தியக்காரத்தனம்?”, “ரீல்ஸ் மோகம் இவ்வளவு ஆபத்தானதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். லைக்ஸ் மற்றும் புகழுக்காக உயிரையே ஆபத்தில் நிக்கும் இப்படிப்பட்ட செயலில் பிறரும் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
சமூக ஊடக புகழ் நிலையற்றதென்ற உண்மையை உணராத இத்தகைய ஆபத்தான சாகச முயற்சிகள் விபரீதத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
"जब आप तय कर लें कि रील बनेगी, चाहे लाइफ रहे या न रहे! 🤯"आपको क्या लगता है रील जरूरी है या जीवन (कृपया इसे नकल करने की कोशिश न करें) pic.twitter.com/Qi9S3g3JVY
— Mahesh Chandra Bhatt (@maheshb20727795) October 17, 2025
இதையும் படிங்க: ஒரு நொடி தாங்க... தண்டவாளத்தில் அமர்ந்திருந்த முதியவர்! வேகமாக நெருங்கி வந்த ரயில்! இறுதியில் நடந்த திக் திக் காட்சி.....