படுக்கை அறையில் 10 நாட்களாக AC-யில் இருந்து வந்த சத்தம்! திடீரென விழுந்த எலி! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் ! வைரல் வீடியோ...
ஈரோடு மாவட்டத்தில், காமராஜ் என்பவரின் வீட்டில் பயன்படுத்தாமல் இருந்த ஏர் கண்டிஷனரில் (AC) கடந்த 10 நாட்களாக வித்தியாசமான சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. இது பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், ஒருநாள் சேதமான எலி ஒன்று கீழே விழ, அதனுடன் பாம்பின் வால் பகுதியும் தெரியவந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக பாம்பு பிடி நிபுணர் யுவராஜ் என்பவரை அழைத்தனர். அவர் வந்தவுடன், ஏசிக்குள் பதுங்கியிருந்த 6 அடி நீளமான சாரைப் பாம்பை மிகவும் திறமையாகப் பிடித்தார். பின்னர், வனத்துறையுடன் இணைந்து, அந்த பாம்பு பாதுகாப்பாக காட்டில் விடப்பட்டது.
மழைக்காலங்களில், ஏசி போன்ற சாதனங்களை நாம் அடிக்கடி பயன்படுத்தாத நேரங்களில், அதன் வெளிப்புற குழாய்கள் வழியாக எலிகள் வருவதும், அவற்றை பின்தொடர்ந்து பாம்புகளும் பதுங்கி விடும் என்றார் பாம்பு பிடி வீரர் யுவராஜ்.
இதையும் படிங்க: தந்தையிடமிருந்து அண்ணனை காப்பாற்றிய குழந்தை! அதுவும் என்ன ஒரு புத்திசாலித்தனம் பாருங்க! வைரல் வீடியோ...
#Watch | pic.twitter.com/Jb9MEHCZpM
— Sun News (@sunnewstamil) July 19, 2025
இதையும் படிங்க: அசுர வேகத்தில் ஓடிய பாம்பை துரத்தி பிடித்த நபர்! இறுதியில் நடந்ததை பாருங்க! வைரலாகும் வீடியோ..