வாயை பிளந்தபடி தாக்கும் ஹாக்னோஸ் பாம்பின் அசாதாரண வீடியோ இணையத்தில் வைரல்!



hognose-snake-viral-video

பாம்புகளின் உலகம் எப்போதும் மனிதர்களை அச்சுறுத்தியும் அதே சமயம் ஆச்சரியப்படுத்தியும் வருகின்றது. சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் காணொளி அதற்குச் சான்றாகும். அந்தக் காணொளியில், வாயை பிளந்து தாக்க முயற்சிக்கும் ஹாக்னோஸ் பாம்பு ஒருவரால் வெறும் கைகளால் எளிதாகப் பிடிக்கப்பட்டு தூக்கப்படுவது காட்சியளிக்கிறது.

வட அமெரிக்க பாம்பின் தனிச்சிறப்பு

வட அமெரிக்காவில் காணப்படும் கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த இந்த ஹாக்னோஸ் பாம்பு, ஐந்து வகையான விஷமற்ற பாம்புகளில் ஒன்றாகும். ஹெட்டரோடான் இனத்தைச் சேர்ந்த இப்பாம்பு, தலைகீழான மூக்கினால் அடையாளம் காணப்படுகிறது. அந்த மூக்கு பகுதியை இவை மண்ணைத் தோண்ட பயன்படுத்துகிறது.

தாக்கும் போக்கு

பயமுறுத்தப்படும் தருணங்களில், இப்பாம்பு தனது தலை மற்றும் கழுத்தை நேராகச் சமன் செய்து உரத்த சீறலுடன் எதிரியை நோக்கித் தாக்கும். எனினும், அவை அரிதாகவே மனிதரை கடிக்கும் தன்மை கொண்டவை.

இதையும் படிங்க: பார்க்கவே புல்லரிக்குது... பிரம்மாண்ட உடலால் ஒரு அறையையே ஆக்கிரமித்த மலைப்பாம்பு! வைரல் வீடியோ....

இறந்தது போல நடிக்கும் பழக்கம்

எதிரிகளைச் சமாளிக்க முடியாத நிலை வந்தால், ஹாக்னோஸ் பாம்பு உருண்டு விழுந்து, நெளிந்து, பின்னர் வாயைத் திறந்து நாக்கை நீட்டி, இறந்தது போல நடந்து விடும். இந்த அசாதாரண பாதுகாப்பு முறையால், பல உயிரினங்களிடமிருந்து தப்பிக்கின்றது.

இவ்வாறான வித்தியாசமான பழக்கவழக்கங்கள் ஹாக்னோஸ் பாம்பை உலகளவில் விலங்கியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாற்றியுள்ளன.

 

இதையும் படிங்க: பெரிய மீனை விழுங்க முடியாமல் திணறிய பறவை! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? வைரல் வீடியோ...