வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
நம்பவே முடியல! ஆக்ரோஷமாக மசூதிக்குள் நுழைந்த காளை! அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க.... வைரலாகும் மர்ம வீடியோ!
சமூக வலைதளங்களில் அடிக்கடி பல அதிர்ச்சிகரமான காணொளிகள் வைரலாகி வருகின்றன. அதில் சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோ, மசூதிக்குள் காளை நுழைந்தது என்ற விஷயத்தால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது நெட்டிசன்களிடையே பரவலான பேச்சுக்குரியதாக மாறியுள்ளது.
மசூதிக்குள் எதிர்பாராத அதிர்ச்சி
ஒரு மசூதியில் இமாம் ஒருவர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென ஓர் ஆக்ரோஷமான காளை உள்ளே நுழைந்தது. அப்போது மசூதியில் இருந்த மக்கள், அந்த காட்சியைப் பார்த்து பதற்றமடைந்தனர். இமாமின் முன் நேராக வந்து நின்ற அந்தக் காளை, அவர் மீது தாக்குதல் நடத்தும் என அனைவரும் பயந்தனர்.
நம்ப முடியாத அமைதி காட்சி
ஆனால் எதிர்பாராத விதமாக, அந்த காளை யாரையும் காயப்படுத்தாமல், இமாமின் முன் சிறிது நேரம் நின்றுவிட்டு அமைதியாக திரும்பிச் சென்றது. இந்த காட்சி, அங்கிருந்தவர்களையும் பின்னர் இணையவாசிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
hafiz_aamir_baramulla என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை நெட்வாசிகள் பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். சிலர், இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் விளைவாக இருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள், இதை உண்மையான நிகழ்வாக நம்பி அதனை ‘அற்புதமான தருணம்’ என வர்ணித்துள்ளனர்.
இந்த சம்பவம் நம்ப முடியாதபோதும், அது மனிதரும் மிருகமும் இடையே உள்ள ஒரு அதிசயமான புரிதலை வெளிப்படுத்துகிறது. இதனால், அந்த வீடியோ இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு!அதில் ஏறி சறுக்கி விளையாடும் குழந்தை! வீடியோ எடுத்த ரசித்த பெற்றோர்...கொந்தளிப்பில் நெட்டிசன்கள்!