அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்...
வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமான நடிகை அனிதா ஹசானந்தனியின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகிறது.
வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியாகியது. இந்தப் படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன், மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை ரவி சங்கர் இயக்கியிருந்தார்.
அனிதா ஹசானந்தனியின் தமிழ் சினிமா அறிமுகம்
இந்த திரைப்படத்தின் மூலம் அனிதா ஹசானந்தனி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவருடன் குணால், நம்பியார், மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: காயங்களை பாடங்களா ஏற்கிறேன்... ரவி மோகன் -ஆர்த்தி சர்ச்சைக்கு நடுவில் வைரலாகும் கெனிஷாவின் பதிவு!
சினிமா பயணமும் இடைவேளையும்
அனிதா, தனது அறிமுகத்திற்கு பிறகு சுக்ரன், நாயகன், மகாராஜா போன்ற படங்களில் நடித்தார். 2016ம் ஆண்டு பிறகு சினிமாவிலிருந்து இடைவேளை எடுத்தார். பின்னர் 2022ஆம் ஆண்டு Maarrich என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரும்ப வந்தார்.
குடும்ப வாழ்க்கையும் மகனின் வருகையும்
2013ம் ஆண்டு அனிதா, ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார்.
தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகை அனிதா ஹசானந்தனியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நடித்தவர் தானா?” என ஆச்சரியப்படுகிறார்கள்.





இதையும் படிங்க: 42 கிலோ உடல் எடையை குறைத்த ரகசியத்தை ரசிகர்களுக்கு சொன்ன அஜித்! இப்படித்தான் என்று அவரே கூறியுள்ளார் பாருங்க...