எச்சரிக்கை! வாட்ஸாப்பினை இப்படி பயன்படுத்தினால் உங்கள் அக்கவுண்ட் விரைவில் தடைபடும்

எச்சரிக்கை! வாட்ஸாப்பினை இப்படி பயன்படுத்தினால் உங்கள் அக்கவுண்ட் விரைவில் தடைபடும்


Whatsapp to ban users in unofficial apps

வாட்ஸாப் அக்கவுண்டினை பயன்படுத்தி வாட்ஸாப்பின் அஃபீசியல் செயலியின் மூலம் இல்லாமல் வேறு ஒரு மூன்றாம் தர செயலியின் மூலம் மெசேஜ்களை அனுப்பும் அக்கவுண்டுகள் விரைவில் தடை செய்யப்படும் என வாட்ஸாப் நிறுவனம் அறிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 1.5 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் வாட்ஸாப்பினை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு மாதத்திற்கு 2 மில்லியன் வாடிக்கையாளர்களின் அக்கவுண்டுகளை வாட்ஸாப் நிறுவனமே ரத்து செய்து வருகிறதாம்.

இந்த பட்டியலில் தற்பொழுது மேலும் ஒரு புதிய கட்டுப்படாட்டினை அறிமுகம் செய்கிறது வாட்ஸாப். இது வாட்ஸாப் அக்கவுண்டினை பயன்படுத்தி வாட்ஸாப்பின் அஃபீசியல் செயலியின் மூலம் இல்லாமல் வேறு ஒரு மூன்றாம் தர செயலியின் மூலம் மெசேஜ்களை அனுப்பும் அக்கவுண்டுகள் விரைவில் தடை செய்யப்படும் என்பது தான். 

Whatsapp

அதாவது ஒருசிலர் GB Whatsapp மற்றும் Whatsapp Plus போன்ற மூன்றாம் தர செயலிகளைக் கொண்டு வாட்ஸாப் அக்கவுண்டினை பயன்படுத்தி வருகின்றனர். இதைப்போன்ற செயலிகளில் அனுப்பும் மெசேஜுக்கள் அனைத்தும் பாதுகாப்பானவை. எனவே இதனைப் பயன்படுத்த வேண்டாம் என வாட்ஸாப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் ஏற்கனவே அதைப் போன்ற அங்கீகரிக்கப்படாத செயலிகளில் இருந்து உங்கள் அக்கவுண்டை எப்படி அஃபீசியல் வாட்ஸாப் செயலிக்கு மாற்றுவது என்பது குறித்த தகவல்களையும் வாட்ஸாப் வலைதளத்தின் FAQ பிரிவில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் பாதுகாப்பான வாட்ஸாப் அஃபீசியல் செயலியைப் பயன்படுத்துமாறு வாட்ஸாப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

Whatsapp

தற்பொழுது வாட்ஸாப் நிறுவனம் இதுகுறித்த எச்சரிக்கையை மட்டுமே விடுத்துள்ளது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக அங்கீகரக்கப்படாத மூன்றாம் தர செயலிகளைப் பயன்படுத்துவோரின் அக்கவுண்டுகள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தடைசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அனைவரும் தாங்கள் உபயோகிக்கும் வாட்ஸாப் செயலியை ஒருமுறை பரிசோதித்து கொள்வது நல்லது.