சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
சக்திவேலின் கோபத்தை தூண்டிவிடும் பாண்டியன்! மேலும் பெரிய வம்பில் சிக்கப்போகும் ஒட்டுமொத்த குடும்பம் ! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை பெரிதும் பரபரப்படையச் செய்து வருகின்றன. அரசி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்வீட்டார் குமரவேல் மீது போலீசில் புகார் அளிக்கின்றனர். இதையடுத்து, போலீசார் குமரவேலை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
இது காரணமாக சக்திவேல், பாண்டியனை சந்தித்து ரோட்டில் நேரடியாக சண்டை போடுகிறார். அப்போது கதிர், தனது தந்தை பாண்டியனுக்கு ஆதரவாக வந்து நிற்கிறார்.
புதிய ப்ரோமோவில், பாண்டியன், "பிள்ளை எப்படி வளர்க்கணும் என்று என்னைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்க," என சக்திவேலிடம் கோபத்தை கிளம்பும்படி கூறுகிறார்.
இதையும் படிங்க: அப்பா சொன்ன ஒரு வார்த்தை! தாலியை குமரவேல் மூஞ்சில் தூக்கி வீசிய அரசி! பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ
அதன்பின் பாண்டியன் மற்றும் கதிர், வங்கிக்கு சென்று லோன் வாங்கும் விஷயத்தில் பேசுகின்றனர். வங்கி அதிகாரிகள் டாக்குமெண்ட் கொண்டு வருமாறு கூற, பாண்டியன், "எங்கே கையெழுத்து போட சொன்னாலும் போட்டுடு, லோன் வாங்கி தொழில் தொடங்கு," எனக் கூறுகிறார்.
இதற்கு கேரண்டி கையெழுத்து போடும் பாண்டியன், எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய பிரச்சனையை சந்திக்கவிருக்கிறார் என்ற முன்னோட்டத்தை ப்ரோமோ காட்டுகிறது.
இந்த ப்ரோமோ வைரலாக பரவி வருகிறது. தொடரின் ரசிகர்கள் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத்தில் நடந்த கலவரம்.. அவன் ஏன் புருஷன் இல்லை! உண்மையை போட்டு உடைக்கும் அரசி! பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பான திருப்பங்களுடன் உள்ள புரோமோ..