
whatsapp-introduce-beta-version-for-iphone-users
ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸாப்ப் பீட்டா வெர்சனை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸாப்ப் நிறுவனம். வாட்ஸாப்ப் பீட்டா என்றால் என்ன? பொதுவாக ஒவொரு நிறுவனமும் வெளியிடும் ஆப்களை முதலில் சோதனை செய்வார்கள்.
அவ்வாறு சோதனை செய்வதற்காக ஒரு சில குறிப்பிட்ட பயனாளர்களுக்கு மட்டுமே சோதனைக்கான ஆப் வழங்கப்படும். இத்தகைய வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஐபோன் வாடிக்கையாளர்களும் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸாப்ப் நிறுவனம்.
இதன்மூலம் வாட்ஸாப்ப் பீட்டா வெர்சனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அந்நிறுவனம் வழங்கும் புது வசதிகளை உடனே பெற முடியும். இந்த வசதியினை பெற ஐபோன் ஆப் ஸ்டோருக்கு சென்று TestFlight என்ற ஆப்பினை பதிவிறக்கம் செய்யவும். பின்னர் நீங்கள் ஒரு டெஸ்ட் யூசர் என்பதை பதிவு செய்ய ஒரு லிங்க் தரப்படும். அந்த லிங்க் மூலம் நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம். பின்னர் வாட்ஸாப்ப் ஆப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
நீங்கள் சோதனை செயலியை பதிவிறக்கம் செய்யும்போது பழைய செயலியை நீக்கவா என்று உங்களுக்கு ஒரு அலெர்ட் வரும். உங்களது பழைய தகவல்கள் அழியாமல் இருக்க பழைய தகவல்களை சேமித்துவைத்துக்கொள்வது நல்லது.
வாட்சப் சோதனை செயலியானது ஒவொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்படும். சோதனை அதாவது பீட்டா செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஏதாவது தவறுகளையோ அல்லது வழக்கத்திற்கு மாறான குறைபாடுகளை பார்த்தாலோ அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வாட்சப் நிறுவனத்திற்கு அனுப்பலாம்.
Advertisement
Advertisement