லாக்டவுனை சமாளிக்க வாட்ஸ்-ஆப்பில் புதிய சலுகை - குரூப் காலிங்கில் கட்டுப்பாடுகள் தளர்வு!

லாக்டவுனை சமாளிக்க வாட்ஸ்-ஆப்பில் புதிய சலுகை - குரூப் காலிங்கில் கட்டுப்பாடுகள் தளர்வு!



Whatsapp increases group calling limits

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் சமயத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் குரூப் காலிங்கிற்கான நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்-ஆப் நிறுவனம் பார்வோர்டு மெஸேஜுக்கான எண்ணிக்கையை குறைத்துள்ளது. தற்போது வீட்டிலே இருப்பவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் ஒரே நேரத்தில் பேச கூடிய குரூப் காலிங்கில் விதிமுறைகளை தளர்த்துள்ளது.

Coronovirus

அதாவது வாட்ஸ்-ஆப் குரூப் காலிங்கில் இதுவரை ஒரே சமயத்தில் 4 நபர்கள் மட்டுமே பேச அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கட்டுப்பாடினை தளர்த்து கூடுதல் நபர்களை இணைக்கும் வசதியை வாட்ஸ்-ஆப் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வசதியால் IOS பயனாளர்கள் ஒரு சமயத்தில் 8 பேருடன் குரூப் காலிங்கில் பேசலாம். ஆண்ட்ராய்டு பயனாளர்கள் அதிகபட்சமாக 5 பேருடன் குரூப் காலிங்கில் பேசலாம்.

தற்போது இந்த புதிய வசதியானது வாட்ஸ்-ஆப் பீட்டா வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிகள் விரைவில் வாட்ஸ்-ஆப்பின் முதன்மை வெர்ஷனில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.