வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்க.! உஷாராக இருங்க, மொத்தமும் போய்விடும்!!
வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்க.! உஷாராக இருங்க, மொத்தமும் போய்விடும்!!

வாட்ஸஅப்பில் ஏஜென்ட் ஸ்மித் என்ற பெயரில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த ஏஜென்ட் ஸ்மித் வைரஸ் இந்தியாவில் 1.5 ஸ்மார்ட்போன்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பயனாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பலவிதமான வித்தியசமான ஆப்களை பதிவிறக்கம் செய்து வருகிறோம்.இவற்றில் கவர்ச்சிகரமான ஆப்களை ஹேக்கர்கள், வெளியிடுகின்றனர். அவற்றை நாம் நமது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்யும் போது, நமது ஸ்மார்ட்போன் தகவல்கள், வங்கிக்கணக்குகள் ஆகியவை ஹேக்கர்களிடம் சென்று விடுகிறது.
அவ்வாறு ஏஜென்ட் ஸ்மித் என்ற வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களில் தாக்கியுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 1.5 கோடி ஸ்மார்ட்போனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனில் ஏஜென்ட் ஸ்மித் வைரஸ் பாதிப்பு இருந்தால் வாட்ஸ்அப்பை ஓபன் செய்யும் போது விளம்பரங்கள் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், எந்த ஒரு வங்கிக்கணக்குகள், செல்போன் தகவல்கள் திருடப்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளிவராத நிலையில், வங்கிக்கணக்கில் கை வைப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.