சிறகடிக்க ஆசை மீனாவா இது! மேக்அப்பில் மின்சாரம் போன்று மின்னும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்....
டிக்டாக் செயலி மூலம் பிரபலமான அரசு பெண் ஊழியர்! வீடியோவை பார்த்து உயர் அதிகாரி எடுத்த அதிரடி முடிவு!

இன்று டிக்டாக் செயலியானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாகி உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த டிக்டாக் செயலிக்கு அடிமைகளாக மாறி விட்டனர். முதலில் பொழுது போக்கிற்காக பார்க்க ஆரம்பித்தவர்கள் பின்னர் தாங்களே வீடியோவை வெளியிட ஆரம்பமாகி விடுகின்றனர்.
இதே போல் சேலம் மாவட்டம் ஒமலூரை அடுத்துள்ள சிக்கம்பட்டி கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணியாற்றியவர் ராஜேஸ்வரி என்ற பெண் ஊழியர். இவர் பணி நேரத்திலும் கூட டிக்டாக் செய்து அதனை பதிவேற்றம் செய்துள்ளார்.
பின்னர் அந்த டிக் டாக் வீடியோவால் பிரபலம் அடைந்துள்ளார் ராஜேஸ்வரி. அந்த வீடியோக்களை பார்த்த உயரதிகாரிகள் ராஜேஸ்வரியை கண்டித்து அவரை புள்ளியம்பட்டி ஊராட்சிக்கு பணியிடை மாற்றம் செய்துள்ளனர்.