பள்ளிக் கல்வியை மேம்படுத்த ஸ்டுடியோ மற்றும் புதிய சேனல் ஆரம்பம்; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.!

பள்ளிக் கல்வியை மேம்படுத்த ஸ்டுடியோ மற்றும் புதிய சேனல் ஆரம்பம்; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.!


school-educational-department-sankottaian

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளை மேம்படுத்த தற்பொழுது ஸ்டூடியோ நிறுவனம் ஆரம்பித்து புதிய சேனல் துவக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் பெருகிவரும் தனியார் பள்ளிகள் மற்றும் அங்குள்ள சிறப்பு வசதிகள் காரணமாக மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது.

tamilspark

மேலும், தனியாருக்கு நிகராக அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் குறைவாகவே உள்ளது. எனவே அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில்கூட அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு உதவிகள் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது ஸ்டுடியோ நிறுவனம் ஆரம்பித்து திறமையான கல்வியாளர்கள் பாடம் எடுக்கும் வீடியோ பதிவுகளை புதிய சேனலில் வெளியிட உள்ளது. மற்றும் பள்ளிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளையும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிகள் தினமும் இரண்டு மணிநேரம் ஒளிபரப்பப்படும். 

என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.