வாட்ஸ்-ஆப்பில் வருகிறது புதிய அப்டேட்! சிலருக்கு மகிழ்ச்சி சிலருக்கு அதிர்ச்சி

வாட்ஸ்-ஆப்பில் வருகிறது புதிய அப்டேட்! சிலருக்கு மகிழ்ச்சி சிலருக்கு அதிர்ச்சி


New feature in whatsapp

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான தகவல் பரிமாற்ற செமலி வாட்ஸ்-ஆப். சாதாரண மக்கள் துவங்கி தொழில் முனைவோர் உட்பட பலதரப்பட்ட மக்களின் முக்கிய அங்கமாக வாட்ஸ்-ஆப் இருந்து வருகிறது.

இந்த வாட்ஸ்-ஆப் செயலியின் மூலம் பலருக்கு நல்ல காரியங்களும் சிலருக்கு தாங்க முடியாத சோகங்களும் ஆரங்கேறியுள்ளது பலருக்கும் தெரியும். நிச்சயம் நம்மை சுற்றி பலரும் இந்த வாட்ஸ்-ஆப் செயலியை பற்றி நல்ல விதமாகவும் சிலர் கெட்ட விதமாகவும் பேசுவதுன்டு. 

Whatsapp

இதற்கு காரணம் வாட்ஸ்-ஆப் செயலியில் உள்ள பல்வேறு வசதிகளை சில ஆசாமிகள் தவறாக பயன்படுத்திக் கொள்வதால் தான். இதில் மிகவும் மோசமானது தனி நபர்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவது தான். இதைப் போன்ற அசம்பாவிதங்கள் ஆரம்ப காலத்தில் பேஸ்புக்கில் அரங்கேறியது. அதன் பின்னர் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

தற்போது அதேபோன்ற நிலை வாட்ஸ்-ஆப்பிலும் உருவாகியுள்ளது. அதாவது அனைத்து பயனாளர்களும் தங்களின் புகைப்படங்களை டிஸ்பிளே பிக்சர்(DP) ஆக வைக்கப் பழகிவிட்டனர். 

அதாவது தற்போதைய வாட்ஸ்-ஆப் வெர்ஷனில் ஒருவரது டிஸ்பிளே பிக்சரை அவரது காண்டாக்டில் உள்ள எவரும் தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யவோ மற்றவர்களுக்கு பகிரவோ முடியும். இதனை பல ஆசாமிகள் தவறாக பயன்படுத்த துவங்கிவிட்டனர். 

Whatsapp

இந்த அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த வாட்ஸ்-ஆப் நிறுவனம் புதிய செக்யூரிட்டி வசதியை வாட்ஸ்-ஆப் பீட்டா வெர்சனில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் யாரும் யாருடைய டிஸ்பிளே பிக்சரை பதிவிறக்கம் செய்யவோ, பகிரவோ முடியாது. இந்த சேவை விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் பலர் நிம்மதியாக இருப்பார்கள். ஆனால் சிலருக்கு வருத்தமாக தான் இருக்கும்.