தானாகவே இயங்கும் வாட்சாப்; கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிய பிழை!

தானாகவே இயங்கும் வாட்சாப்; கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிய பிழை!


New bug found in whatsapp beta version

வாட்சப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . வாட்சப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதிலிருந்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பேஸ்புக் நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதிய புதிய வசதிகளை உருவாக்கித் தருவது தான்.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் புதிய வசதியுடன் கூடிய அப்டேட் கொண்ட புதிய வெர்சனை அனைவருக்கும் வெளியிடுவதற்கு முன்பு whatsapp Beta என்ற சோதனை வெர்ஷனை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கி வருகிறது whatsapp. இந்த சோதனை ஓட்டம் அந்த வெர்சனில் இருக்கும் குறைகளை கண்டறிய அவர்களுக்கு உதவியாக உள்ளது.

Whatsapp

இந்த வகையில் ஆண்ட்ராய்டு 2.19.27 என்ற புதிய வெர்சனை whatsapp beta வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தற்பொழுது வழங்கியுள்ளது whatsapp. இந்த வெர்சனில் புதிய குறை ஒன்றினை கண்டறிந்துள்ளார் வாடிக்கையாளர் ஒருவர்.

அந்தக் குறை என்னவெனில் whatsapp குரூப்பில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட மெசேஜிற்கு ரிப்ளை செய்துவிட்டு அந்த குரூப்பை விட்டு வெளியே வந்து விடுவோம். பிறகு மீண்டும் அந்த குரூப்பினை திறக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு மெசேஜிற்கு தானாகவே ரிப்ளை செய்வதுபோல் எடிட் ஆப்ஷனில் அந்த மெசேஜ் காண்பிக்கப்படுகிறது.

இதனை குடித்து அந்த வாடிக்கையாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்னும் உறுதியான தகவல்களை வெளியிடவில்லை.