அப்படிப்போடு.. இந்திய சந்தைகளை ஆட்டுவிக்க வருகிறது லாவா 5G ஸ்மார்ட் போன்..! இந்தியாவின் அசத்தல் தயாரிப்பு..!!

அப்படிப்போடு.. இந்திய சந்தைகளை ஆட்டுவிக்க வருகிறது லாவா 5G ஸ்மார்ட் போன்..! இந்தியாவின் அசத்தல் தயாரிப்பு..!!


lava-blaze-5g-new-model

உலகளவில் இந்தியா ஸ்மார்ட்போன்கள் விற்பனை சந்தையாக இருக்கிறது. இந்திய அளவில் ஒப்போ மற்றும் சியோமி நிறுவனத்தின் போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போன்களும் சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், லாவா திரைப்படத்தின் போன்கள் கடந்த பல ஆண்டுகளாக நம்மிடையே நிலைத்து நிற்கிறது.

Technology news

லாவா நிறுவனம் சமீபத்தில் Lava Blaze 5G-ஐ அறிமுகம் செய்தது. இது பல்வேறு அம்சங்களுடன் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், Lava தனது Lava Blaze 2 மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. 

இந்திய சந்தையில் இதன் விலை ரூ.11 ஆயிரம் இருக்கலாம் என்றும், ஏப்ரல் மாதம் முதல் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. லாவாவின் பின்புறம் வெளிப்படைத்தன்மையுடன் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.