தித்திப்பு செய்தி.. 2026 பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.5,000?.. தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.!



Pongal Gift: ₹5,000 Cash Benefit Expected for Ration Card Holders Ahead of 2026 Elections

2026 பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 ரொக்க தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டின் தை மாதத்திலும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடும் பொருட்டு அரசு கரும்பு, சர்க்கரை, வெல்லம் உட்பட பரிசுத்தொகுப்புடன் பணத்தையும் வழங்கும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் ரூ.2500 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டது. 

பொங்கல் பரிசுத்தொகுப்பு:

அதனை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த தொகை கூடுதலாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கடந்தாலும் ரொக்க பணம் என்பது வழங்கப்படாமல் இருக்கிறது. பணத்திற்கு பதிலாக 21 மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்புகள் ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்பட்டு வந்தன. 

இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு என்னென்ன? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2000....? ரெடியா இருங்க....!

பொங்கல் பரிசு

2026 பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பணம்?

இந்த நிலையில் தற்போது 2026 ஆம் ஆண்டு ரூ.5,000 வரை பொங்கல் பரிசு தொகுப்பு பணம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 கோடியே 21 லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்க பணத்துடன் மாதம் ரூ.1000 போன்ற உரிமை தொகையும் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது தை மாதத்தில் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! சற்று முன்.... ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000..... .? வெளியான புதிய தகவல்.! நிதிதுறைக்கு அரசு உத்தரவு!