அச்சச்சோ.. செல்போன் நம்பரை வைத்தே ஹேக்கிங் செய்யலாம் - கூகுளின் ஆய்வில் பகீர் தகவல் அம்பலம்.!

அச்சச்சோ.. செல்போன் நம்பரை வைத்தே ஹேக்கிங் செய்யலாம் - கூகுளின் ஆய்வில் பகீர் தகவல் அம்பலம்.!



Google Advice to Android Users

 

தொழில்நுட்ப உலகில் செல்போன்களின் பயன்பாடு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. ஆனால், இவைகளை வைத்து மனிதர்களின் தனிப்பட்ட தரவுகளில் இருந்து பணம் வரை திருடப்படுகிறது.

இந்த நிலையில், நமது செல்போன் நம்பரை மட்டும் வைத்தே நமது செல்போனை ஹேக் செய்யலாம் என கூகுள் கண்டறிந்துள்ளது. ப்ராஜெக்ட் ஜீரோ என்ற கூகுள் ஆய்வில் இது உறுதியாகியுள்ளது.

google

அதன்படி, ஹேக்கர் நமது செல்போன் நம்பரை மட்டும் வைத்து அதனை ஹேக்கிங் செய்துவிடலாம் என்றும், இதன் வாயிலாக நமது தகவல்கள் திருடப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய பிரச்சனை Samsung Exynos சிப்-களில் அதிகம் காணப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.