நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
மாதவிடாயை நிறுத்த மாத்திரை சாப்பிட்ட 18 வயது இளம்பெண் உயிரிழப்பு! மருத்துவர் சொன்ன அதிர்ச்சி காரணம்....
டெல்லியில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது மாதவிடாய் நிறுத்த ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டது பேரதிர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. உடல்நல பாதிப்புகளால் ஏற்பட்ட ஆழமான நரம்பு ரத்த உறைவு காரணமாக அந்த இளம் பெண் உயிரிழந்த சம்பவம் மருத்துவ வட்டாரங்களை உலுக்கியுள்ளது.
மருத்துவர் எச்சரிக்கையும் தந்தை மறுப்பும்
அந்த இளம்பெண்ணுக்கு கடுமையான கால் வலி மற்றும் வீக்கம் இருந்ததால் ஸ்கேன் மேற்கொள்ளப்பட்டதில், இரத்த உறைவு தொப்புள் வரை பரவியிருந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய போதிலும், தந்தை மறுத்ததால் நிலைமை மோசமடைந்தது. துரதிஷ்டவசமாக, நள்ளிரவு 2 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் மூச்சுத் திணறலால் அவர் உயிரிழந்தார்.
மருத்துவர் விவேகானந்த் விளக்கம்
Rebooting The Brain Podcast-ல் பேசிய வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேகானந்த், அந்த இளம்பெண் சம்பவத்தை நினைவு கூர்ந்தார். "அவளின் கால்களில் கடுமையான வலி மற்றும் வீக்கம் இருந்தது. வீட்டில் பூஜை காரணமாக மாதவிடாயை நிறுத்த ஹார்மோன் மாத்திரைகள் எடுத்ததாக அவள் கூறினாள். நாங்கள் அவளுக்கு DVT இருப்பதை கண்டறிந்தோம். ஆனால் சிகிச்சைக்கு தாமதமானதால், அந்த இளம் உயிரை காப்பாற்ற முடியவில்லை," என்றார்.
இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தை விளையாடும்போது நொடிப்பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! கதறி துடிக்கும் பெற்றோர்..
DVT குறித்து எச்சரிக்கை
DVT (Deep Vein Thrombosis) என்பது கால்களில் ஆழமான நரம்புகளில் உருவாகும் உயிருக்கு ஆபத்தான ரத்த உறைவு. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் போது மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும். மருத்துவர்கள் பொதுமக்கள் இதுபோன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என எச்சரிக்கின்றனர்.
இளம் உயிர்களை காவு கொள்ளும் இந்த நிலைமை குறித்து மக்கள் விழிப்புணர்வு பெருக வேண்டிய அவசியம் அதிகரித்து வருவதை டெல்லி சம்பவம் வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: மருத்துவ அலட்சியால் 24 வயது பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! 3 ஆண்டுகள் கழித்து பெண்ணின் கடைசி கட்ட போராட்டம்!